அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் அழகானபொன்மொழிகள்

அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன் மொழிகள். அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகள்: "எதிரிகள் தாக்கித் தாக்கித், தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்." "மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்து நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்". "போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் கலந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல பக்கத் துணையாக இருப்பது நம் கல்வி மட்டுமே". "மறப்போம் மன்னிப்போம்". "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு." "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்". "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு". "பிறருக்குத் தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாக விடுகின்றோம்". "நெஞ்சிலேயே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி". "ஒரு ஜனநாயக சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்குத் தடையோ சுதந்திர உணர்வுகளு...