அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் அழகானபொன்மொழிகள்

அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன் மொழிகள்.

அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகள்:


"எதிரிகள் தாக்கித் தாக்கித், தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்."


"மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்து நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்".


"போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் கலந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல பக்கத் துணையாக இருப்பது நம் கல்வி மட்டுமே".


"மறப்போம் மன்னிப்போம்".


"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு."


"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்".



"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு".



"பிறருக்குத் தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாக விடுகின்றோம்".


"நெஞ்சிலேயே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி".


"ஒரு ஜனநாயக  சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்குத் தடையோ சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது."


"புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது அதுதான் நம்மைத் தேடி வர வேண்டும்".


"நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்".


"நான் எப்பொழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்".


"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு".


"ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று  எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள் காலத்தின் தாக்குதலைக் கயவர்களின் தாக்குதல் என்றும், பகுத்தறிவின் வேகத்தை பாவ காரியம் என்றும், தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்."


"மின்சார விளக்குகள் தேவையில்லை-பழைய குத்துவிளக்கு தான் இருக்க வேண்டும். விமானம் பறக்கக் கூடாது- கருடன் தான் பறக்க வேண்டும். ரயில் வண்டி கூடாது- கட்டை வண்டி தான் சிறந்தது. தீப்பெட்டி தேவை இல்லை- சிக்கிமுக்கிக் கல் தான் தேவை. துப்பாக்கியா வேண்டாம்- வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை- பர்ணகசாலைகள் போதும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால் இந்தக் காலம் கெட்டு விட்டது. பழைய காலம் தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?".


"அழகு ஒரு ஆபத்தான ஆயுதம். அதனால் ஆளப் படுபவர்கள் ஆண்கள். ஆள்பவர்கள் பெண்கள்.


"அஞ்சா நெஞ்சம் படைத்த இலட்சியவாதிகள், நாட்டிற்கு கிடைக்கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள் ஏனெனில்,பணம் வெறும் இரும்பு பெட்டியில்தான் தூங்கும். ஆனால், இந்த செல்வங்களோ மக்களின் இதய பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.


"விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு".


" பொது வாழ்வு புனிதமானது உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது."


" பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் பட்டத்தரசனும் கூட சட்டமிட்டு தடுத்துவிட முடியாது. அது போலத்தான் உண்மை காதல் எனும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும்  ஒருநாளும் அழித்துவிட முடியாது."



"வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணைப் பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல்  நல்வாழ்வு பெற வேண்டுமானால், நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்."



"கத்தியை தீட்டாதே, புத்தியைத் தீட்டு".


"மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு".


"நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று கூறும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதி படைத்த உள்ளங்கள் தேவை."


"கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. ஆனால் இவை சாதாரணமானவைதான், ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்."


"பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம் தான் பேச்சு மேடை, அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு."



"அறிவுப் பண்ணைக்கு பணியாற்ற முன் வருபவர்களை, நாடு வரவேற்பதில்லை, நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை, தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது."



"சீமான்களில் சிலருக்கு கூட சிற்சில நேரங்களில், ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும், என்ற ஆசை வருவதுண்டு, ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம் பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது."


"சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் எய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு சாமானியன் படிப்பறிவு இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான், எது வெண்ணை எது சுண்ணாம்பு என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குத் தெரியும்."


"பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த பிறகு, மனிதனிடம் வாதிடுவது, செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்."


"ஏழைகளை வஞ்சிக்க ஒரு ஏற்பாடு அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் அதற்கு பெயர் ஜாதி. கொள்ளை அடிப்பதற்கு ஓரு திட்டம் அதற்குப் பெயர் பூஜை, சடங்கு, தட்சனை."


"கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திட மனம் இல்லை என்றால், கடமையை நிறைவேற்ற முடியாது."



"பெண்-வீரத்துக்குப் பேழை, காதலுக்குக் கண், வாழ்க்கைக்கு வழிகாட்டி, கல்விக்குக்  கருவி, என்றான் திராவிடன் சமத்துவம் தந்தான். தவத்தை கெடுக்கவும், தன்னினம் வளரப் பிறனைக் கூடவும், அரசனை மயக்கிடவும், ஊர்வசி, ரம்பை, திலோத்தமை,மேனகை உண்டு என்றான் புராணிகன்."


"ஆளவந்தார்களுக்கு ஆணவம் இருப்பதும், எத்தகைய எதிர்ப்பு கிளம்பினும் எதிர்த் தொழித்தாக வேண்டும்  என்ற எண்ணம் தோன்றுவதும், நோய் ஆகிவிட்டது, அதிலும் அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள அதிகாரபலம் பெரியதோர் பிடிவாத குணத்தை தந்திருக்கிறது."



"இலட்சிய வெறிக்கும், ஆதிக்க வெறிக்குமிடையே போராட்டம் நடைபெற்றால், ஆதிக்க பித்து வெற்றி பெற்றது என்பதற்கு உலக சரித்திரத்திலே ஆதாரம் கிடையாது. இலட்சியம் வாகை சூடிற்று என்ற உண்மை ஏராளமாக காணக்கிடக்கின்றது."


"பாடுபட்டவன் உடலிலே சேறு இருக்கின்றது, பாடு படாதவன் உடலிலே சந்தனம் இருக்கிறது. இது நியாயமா?"



"மறைமுக வரி-மூட்டைப்பூச்சி, நேர்முக வரி-கொசு."



"அவன் (நெப்போலியன்) கல்லறை புகுந்தான். ஆனால் அவன் கொண்டிருந்த ஓரரசு, பேரரசு, வல்லரசு என் அரசு எனும் விபரீத எண்ணம் கல்லறைக்கு அனுப்பப்படவில்லை. அனுப்பிவிடவேண்டும் என்று பாடம்புகட்டத் தான், அந்த மாவீரனின் கல்லறை காட்சிப் பொருளாகி நிற்கிறது."


"தேசிய உணர்ச்சி உருவானதும் அதனை முதலாளிகள் விலைக்கு வாங்குவார் என்பதும், முதலாளியின் கைச்சரக்கானதும், அதை ஏகாதிபத்தியம் தோழமை கொள்ளும் என்பதும் அரசியல் அரிச்சுவடி ஆகும்."



"அகநானூறு புறநானூறுகளில்,எந்த தமிழ் நாட்டு மன்னனாவது, போருக்கு கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ? பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ? எங்கேயாவது பாடல் உண்டா?"

பெரியாரின் பொன்மொழிகள்:

"எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை
  எங்கே வழிக்கியது என்று பார்க்க வேண்டும்".


"ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தும்
  பிறருக்கும் உண்டாகச் செய்வது தான் நாகரிகம்".


"ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால்
  நாட்டுமக்கள் ஒழுக்கம் உடையவர்களாக இருத்தல் அவசியம்".


"ஆணும்-பெண்ணும் ஜீவனில் ஒன்றுதான் ஒன்றுக்கொன்று உயர்வு-தாழ்வு கிடையாது இரண்டும் மனித ஜீவனேயாகும்".


"ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்வது போல, தங்களுக்கு கீழானவர்களும் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும்".


"உன் சாத்திரத்தை விட
 உன் முன்னோரை விட
 உன் வெங்காயம் வெளக்கமாத்த விட
 உன் அறிவு பெரிது, அதை சிந்தி."


"உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும்,
பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்".


"ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவன் செய்த முயற்சிகளும், அவன் துவக்கிய காரியங்களும் செத்துப் போய் விடுவதில்லை".


"மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும்".


"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம்"



"உருவில் மனிதனாகவும், செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி, மனிதத் தன்மையுடைய மனித சமூகத்தை உருவாக்குவதே எனது லட்சியம்".



"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு"


"பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி"


"மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்".



"மக்களின் ஒழுக்கத்தையும், மதியையும் கெடுப்பது மது".


"மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்".



"சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி,
சிந்திக்காதவன் மிருகம், சிந்திக்க பயப்படுகிறவன் கோழை".



"விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்".



"பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப்பற்று சிறிதளவும் காணமுடியாது"



"ஒழுக்கம் என்பது சொல்லுகின்ற படி நடப்பதும், நடந்தபடி சொல்வதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல".


"நாம் மானமுள்ள சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளும் நிலை ஏற்பட வேண்டுமானால், நம் எண்ணிக்கைக்கு உண்டான விதிப்படி கல்வி,
உத்தியோகம், பதவி ஆதிக்கம் ஏற்பட்டு தீரவேண்டும்"



"பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து".


"பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை, ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்".


"மூடநம்பிக்கையும், குருட்டுப்பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்".


"விதியை நம்பி மதியை இழக்காதே"



"எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல".



"உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள், உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதி பதியுங்கள் நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது  அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை, இழித்தன்மை வேறு என்ன என்று சிந்தியுங்கள்".
     "தமிழ்நாடு தமிழருக்கே!
     "தமிழ் நாடு தமிழருக்கே!
    "தமிழ்நாடு தமிழருக்கே!".


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்:


"பெரும் சாதனைகளை செய்ய மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும் அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்."


"என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொள் இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்துவிடாதே".

"சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்".

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே".


"பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே, உண்மையைச் சொல்லி மாற்றிக்கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது".

"நேர்மையுடன் நில்லுங்கள், தைரியமாக இருங்கள், சற்றும் பிறழாத நீதிமானாக இருங்கள், தோல்வி கண்ட போதும் துவளாமல் இருங்கள்".

"நமது நாடு மத சகிப்புத் தன்மையின் உறுதி பெற்ற நாடாகி விட்டது, இங்குதான் இந்து மதத்தை இகழ்ந்து பேசுபவர்களுக்கு, மசூதியையும் சர்ச்சையும் இந்துக்கள் கட்டிக் கொடுக்கிறார்கள்".

"இந்தியாவில் ஒவ்வொரு முன்னேற்றமும் மத எழுச்சியைச் தொடர்ந்தே வர முடியும், சமுதாயக் கருத்துக்களாலோ, அரசியல் கருத்துக்களாலோ மூழ்கடிக்கும் முன் இந்தியாவை ஆன்மீக கருத்துக்களால் நிரப்புங்கள்".



"அச்சமில்லை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம், அச்சம்தான் துன்பத்தை கொண்டு வருகிறது, பாவத்தைக் கொண்டு வருகிறது, சாவை கொண்டு வருகிறது".
"நாம் துன்பப்படுவது நம் செயல்களின் காரணமாகத்தான், அதற்கு கடவுள் பொறுப்பல்ல".

"ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனை நீ அவனது இரு கன்னத்திலும் அறை.கோழையாக வாழ்வதை விட, வீரனாக மடிவதே மேல்".

"சண்டையிடுவதிலும், குறை சொல்லிக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது, நிலமையைச் சீர்ப்படுத்தி அமைக்க  அவை நமக்கு உதவப்போவதில்லை".   



 "நாம் நமது மனத்தை அடக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம், அந்த கணமே நாம் எஜமானர்கள் ஆகிவிடுவோம் இந்தப் பிரபஞ்ச நாடகத்தில் நாம் ஈடுபட மறுக்கிறோம், நான் என் பங்கை ஏற்காமல் போனால் அது மறையத்தான வேண்டும்".

"அனைத்திற்கும் நாமே பொறுப்பு, நான் ஏழையாக, சாதாரணமானவனாக பிறந்தேன். வாழ்க்கை முழுவதும் போராட்டங்களையே சந்தித்தள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம்.ஆனால் அதற்கு காரணம் நீங்களே.குற்றத்தை யார் மீதும் சுமத்தாதீர்கள்.அதனால் உங்கள் துன்பம் தான் அதிகமாகும்."

"கோழையும், முட்டாளும்  "இது என் விதி என்பான்" ... ஆற்றல் மிக்கவனோ என் விதியை நானே வகுப்பேன் என்று கூறுவான்"....

"அனைத்திலும் இறைவனை காண்பது நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்".

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவிகளும் உனக்குள்ளேயே உள்ளன".

"அன்பே பலம் மிக்கது அன்புடன் ஒப்பிடும் போது அறிவும் ஆற்றலும் கூட பலம் குறைந்தவைகளே"..

"நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ , அப்படி நம்மை செய்துகொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது".


"வெறும் புத்தகங்களைப் படிப்பதால் தான் மனிதன் வறட்சி அடைகிறான், படித்தவன் யார்? துளியளவு அன்பை உணர்பவனே படித்தவன். கடவுளே அன்பு, அன்பே கடவுள், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்."

"இறைவனை நீதிபதியாகவோ, தண்டிப்பவராகவோ, பணிய வேண்டிய ஒருவராக வழிபடும் முறைகள் தாழ்ந்தவை. அவை வர வர விரிந்து உயர்ந்த முறைகளாகலாம். எனினும் அவை அன்பு என்னும் பெயருக்கு தகுதி வாய்ந்தவை அல்ல"



"மேலைநாட்டில் சமூக வாழ்வு கணீரென்று சிரிப்பதை போன்றுள்ளது. அதன் உள்ளேயோ அழுகை மறைந்துள்ளது. வேடிக்கையும், கேளிக்கையும் எல்லாம் மேற்பரப்பில் தான்."


"இன்னொருவனுக்கு தீமை விளைவிக்கும் போது, உனக்கே நீ தீமை செய்து கொள்கிறாய். ஏனெனில் நீயும் உன் சகோதரனும் ஒன்றே".


"உலகின் குறைகளை பற்றி பேசாதே, குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால் நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால், உலகை தூற்றாதே, குறை சொல்லாதே குறை சொல்லி உலகை மேலும் பலவீனப்படுத்தாதே, உலகின் குறைகள் குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைந்தவை அல்லவா".



"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆவாய்".

"பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய், செடிகளாக இரு அப்போதுதான் பூத்து கொண்டே இருப்பாய்".


"வெற்றியை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது, தோல்வியை சந்தித்த அவன் இதயம் இரும்பை விட வலிமையானது".


"பின்னோக்கி பார்க்காதே, இப்போது முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ, அதையே பார். நீ முன்னேறுவது உறுதி".

"ஒருவன் சர்ச்சிக்கோ, கோவிலுக்கோ, மசூதிக்கோ ஒருமுறைகூட போகாதவனாக இருக்கலாம். எந்தச் சடங்கும் செய்யாதவனாக இருக்கலாம், ஆனால் தன்னுள் கடவுளைை உணர்ந்து அதன்் காரணமாக உலகின் பகட்டுகளிலிருந்து  தொடப்படாதவனாக இருந்தால் அவன் புனிதன். அவன் மகான்."


"நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்து விடு".




"உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை".



"நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால் வலிமை படைத்தவன் ஆனாய்".



"கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார், அதில் துணிச்சல் தென்படும், அதைப் புரிந்து கொண்டால் துணிச்சல் என்பது, நீ அணியும் ஆடையாக மாறிவிடும்".


"சந்தோசத்தை விட... கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய நல்ல படிப்பினைகளை சொல்லிக்கொடுக்கின்றன".


"தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை".



"எல்லோரிடமும் அன்பைக் கொடுத்து ஏமாந்து விடாதே, யாரிடமும் அன்பை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடாதே".



"நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை!".


"மரணம் வரும் வரையிலும் நீ வேலை செய்‌. நான் உன்னுடன் இருக்கின்றேன். நான் இறந்த பிறகும் என் ஆவி உன்னுடன் இருந்து வேலை செய்யும்".


"எல்லா மனிதர்களுக்கும் உணர்வு கடந்த நிலை என்பது ஒரே போன்றது தான். இந்துக்கள் கிறிஸ்தவர்கள், முகம்மதியர்கள், பௌத்தர்கள் மற்றும் எந்த மதத்தையும் சாராதவர்களாலும்  உடல் நிலையை கடந்து செல்லும் போது அடையும் அனுபவம் ஒன்று தான்".



"இந்திய மண் தான் எனது சொர்க்கம், இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன்".


"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி".


"புன்னகையின் வழியாகவும், அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கிறோம், அனுபவம் ஒன்று தான் மிகச் சிறந்த ஆசிரியர்".


"எதையும் தெரியாது என்று சொல்லாதே, சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர் வீரனை போன்று செயல்படு".


"அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.
ஆணவமாக பேசினாள், அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாக பேசினால், வேலையை இழப்பாய்...
வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்...
பெருமையாகப் பேசினால் ஆண்டவனின் அன்பை இழப்பாய்.."



Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ் நூலாசிரியர்களும், நூல்களும்/தமிழ் நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்..

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்