தமிழ் பழமொழியும் அதன் விளக்கமும் பொருளும்
- தமிழ் பழமொழியும் அதன் பொருளும்
1.ஆயிரங்காலத்துப் பயிர்-நீண்ட காலத்திற்கு உரியது
2. எடுப்பார் கைப்பிள்ளை-தன் சிந்தனை இன்றி சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பது
3. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது-பட்டறிவில்லாத படிப்பறிவு.
4. அவலை நினைத்து உரலை இடித்தல்-எண்ணமும் செயலும் ஒத்து வராமை.
5. முதலை கண்ணீர்-பொய்யை அழுகை.
6. அவசரக் குடுக்கை-எண்ணித் துணியாதார்.
7. ஆகாயத்தாமரை-இல்லாத ஒன்று
8. கம்பி நீட்டல்-சொல்லிக்கொள்ளாமல் செல்லல்.
9.தாளம் போடுதல்-எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளல்.
10.கானல் நீர்-இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது.
11. பஞ்சாய்ப் பறத்தல்-அலைந்து திரிதல்
12. குட்டிச்சுவர்-பயனின்றி இருத்தல்.
13. கொட்டியளத்தல்-மிகுதியாகப் பேசுதல்
14. அகழ்வாரை தாங்கும் நிலம் போல-பொறுமை
15. நன்பால் கலந்தீமையால் திரிதல் போல-கெடுதல்
16. மரப்பாவை நாணால் உயிர்மருட்டல் போல மயங்குதல்.
17. அடுத்தது காட்டும் பளிங்கு போல-வெளிப்படுத்துதல்
What 18. அத்தி பூத்தாற்போல் -அரிய செயல்
19. அடியற்ற மரம் போல-வீழ்தல்
20. இலவு காத்த கிளி போல-ஏமாற்றம்
21. உடலும் உயிரும் போல-ஒற்றுமை ,நெருக்கம்
22. கடல் மடை திறந்தார் போல-வெளியேறுதல்
23. பகலவனை கண்ட பனி போல-நீங்குதல்
24. உள்ளங்கை நெல்லிக்கனி போல-தெளிவு
25. தாமரை இலை தண்ணீர் போல-பற்றின்மை
26. கடலில் கரைந்த காயம் போல-பயனற்றது
27. கொடுக்கத் தேனாய் கொட்டுவது ஏன்-வருத்தம்
28. இடியோசை கேட்ட நாகம் போல-நடுக்கம்
29. செந்தமிழும் சுவையும் போல-ஒற்றுமை
30. தாயைக் கண்ட சேயைப் போல-இன்பம் மற்றும் அதிக மகிழ்ச்சி.
31. நகமும் சதையும் போல-இணை பிரியாமை
32. மழைக் காண பயிர் போல-வாடுதல்
33. வேலியே பயிரை மேய்ந்தது போல-நயவஞ்சகம்
34. அன்றலர்ந்த மலர்போல-புத்துணர்வு
35. அனலில் விழுந்த புழுப்போல்-வேதனை
36. கண்கட்டு வித்தை போல-மாயத்திரை
37. பத்திரை மாற்று தங்கம் போல-பெருமை
38. நாயும் பூனையும் போல-பகை
39. அலை ஓய்ந்த கடல் போல-அமைதி
40. பசுமரத்தாணி போல-எளிதாகப் பதிதல்
41. குன்றின் மேல் இட்ட விளக்கு போல-பயனுடைமை மற்றும் பயன்
42. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று போல-அறியாமை,தேவையற்ற செயல்
43.இலைமறைகாய் போல-வெளிப்படுதல்
44. ஆலையில் அகப்பட்ட கரும்பு போல-துன்பம்
45. குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல-நாசம்
46. செவிடன் காதில் ஊதிய சங்கு போல-பயனின்மை
47. ஞாயிறு கண்ட தாமரை போல-மகிழ்ச்சி
48. நீர் மேல் எழுத்துப் போல-நிலையற்றது
49. பழம் நழுவி பாலில் விழுந்தது போல-இன்ப மிகுதி
50. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல-வருத்தம்
51. அனலில் பட்ட மெழுகு போல-துன்பம் கண்டு உருகுதல்.
52. பொன்மலர் மணம் பெற்றது போல-பொருட் செல்வம் அறிவு செல்வதால் தேடிக்கொள்வது.
53. கண்ணில்லாதவன் கண் இழந்தது போல-தவிப்பு.
54. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல-அத்துமீறல்.
55. அச்சில் வார்த்தார் போல்-ஒரே சீராக
56. அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல-ஏமாற்றுதல்
57. ஆழம் தெரியாமல் காலை விட்டது போல திட்டமிடாமை
58. இஞ்சி தின்ற குரங்கு போல-விழித்தல்
59. இரும்பை கண்ட காந்தம் போல-கவர்ச்சி
60. உடும்பு பிடி போல-பிடிப்பு
61. உமையும் சிவனும் போல-நட்பு நெருக்கம்
62. உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல-உறுதி
63. ஊமை கண்ட கனவு போல-தவிப்பு, கூற இயலாமை.
64. எள்ளில் எண்ணெய் போல-ஒளிந்து இருத்தல், மறைவு.
65. ஏழை பெற்ற செல்வம் போல-மகிழ்ச்சி
66. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டினார் போல-விரட்டுதல்
67. வருமுன் காவாமை கயிறற்ற பட்டம் போல- தவித்தல் ,வேதனை.
68. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல-பிறரை ஏமாற்றுதல்
69. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல-துன்பம் மற்றும் வேதனை
70. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தார் போல-வேகம்
71. சீறிய நாகம் போல-கோபம்
72. கடன் பட்டார் நெஞ்சம் போல-கலக்கம் வருத்தம்
73. செல்லரித்த ஓலைப் போல-பயனின்மை
74. பாம்பின் வாய் தேரை போல-மீளாமை
75. நீரும் பாம்பும் போல-விலகுதல்
76. முக்காலம் உணர்ந்த முனிவர் போல -அறிதல்
77. பாய் மரம் சாய்ந்தது போல --விழுதல்
78. மரம் ஏற்றின் வண்டி போல-சுமை
79. புற்றீசல் போல-பெருகுதல்
80. புளியம் பழமும் தோடும் போல-ஒற்றுமை
81. கோலை எடுத்தால் குரங்கு ஆடுவது போல--
பயம்
82. பால்மணம் மாறாத குழந்தை போல -வெகுளி
83. மேகம் கண்ட மயில் போல-- மகிழ்ச்சி ஆனந்தம்
84. சாயம்போன சேவை போல--மதிப்பின்மை
85. சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல--அதிக இன்பம்
86. சித்திரை பதுமை போல --
அழகு
87. சிவபூஜையில் கரடி போல --விருப்பமின்மை
88. சேற்றில் பிறந்த செந்தாமரை போல --உயர்வு மற்றும் மேன்மை
89. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல-- திரும்பச் செய்தல், அறிவின்மை
.
90. தோன்றி மறையும் வானவில் போல-- நிலையற்ற நிலையாமை
91. நத்தைக்குள் முத்து போல- உயர்வு, மேன்மை
92. நீருக்குள் பாசிபோல-- நயவஞ்சகம், ஏமாற்றம்
93. தாயைப் போல பிள்ளை-தொடர்பு
94. திருடனைத் தேள் கொட்டியது போல் --சொல்லமுடியாத வேதனை
95. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல--வேண்டாத வேலை ,கேடு செய்தல்
96. காட்டுத்தீ போல --வேகமாக பரவுதல்
97. சித்திரப் பதுமை போல-- அழகு
98. குடத்திலிட்ட விளக்கு போல --இகழ்ச்சி
99. நாண் அறுந்த வில் போல-பயனற்றது
100. குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டு வருவது போல--குறும்புகளில் ஈடுபடுவது..
68. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல-பிறரை ஏமாற்றுதல்
69. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல-துன்பம் மற்றும் வேதனை
70. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தார் போல-வேகம்
71. சீறிய நாகம் போல-கோபம்
72. கடன் பட்டார் நெஞ்சம் போல-கலக்கம் வருத்தம்
73. செல்லரித்த ஓலைப் போல-பயனின்மை
74. பாம்பின் வாய் தேரை போல-மீளாமை
75. நீரும் பாம்பும் போல-விலகுதல்
76. முக்காலம் உணர்ந்த முனிவர் போல -அறிதல்
77. பாய் மரம் சாய்ந்தது போல --விழுதல்
78. மரம் ஏற்றின் வண்டி போல-சுமை
79. புற்றீசல் போல-பெருகுதல்
80. புளியம் பழமும் தோடும் போல-ஒற்றுமை
81. கோலை எடுத்தால் குரங்கு ஆடுவது போல--
பயம்
82. பால்மணம் மாறாத குழந்தை போல -வெகுளி
83. மேகம் கண்ட மயில் போல-- மகிழ்ச்சி ஆனந்தம்
84. சாயம்போன சேவை போல--மதிப்பின்மை
85. சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல--அதிக இன்பம்
86. சித்திரை பதுமை போல --
அழகு
87. சிவபூஜையில் கரடி போல --விருப்பமின்மை
88. சேற்றில் பிறந்த செந்தாமரை போல --உயர்வு மற்றும் மேன்மை
89. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல-- திரும்பச் செய்தல், அறிவின்மை
.
90. தோன்றி மறையும் வானவில் போல-- நிலையற்ற நிலையாமை
91. நத்தைக்குள் முத்து போல- உயர்வு, மேன்மை
92. நீருக்குள் பாசிபோல-- நயவஞ்சகம், ஏமாற்றம்
93. தாயைப் போல பிள்ளை-தொடர்பு
94. திருடனைத் தேள் கொட்டியது போல் --சொல்லமுடியாத வேதனை
95. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல--வேண்டாத வேலை ,கேடு செய்தல்
96. காட்டுத்தீ போல --வேகமாக பரவுதல்
97. சித்திரப் பதுமை போல-- அழகு
98. குடத்திலிட்ட விளக்கு போல --இகழ்ச்சி
99. நாண் அறுந்த வில் போல-பயனற்றது
100. குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டு வருவது போல--குறும்புகளில் ஈடுபடுவது..
Super
ReplyDelete