Posts

Showing posts from December, 2019

கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள்

                    கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள் *கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர். *காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு. * பிறந்த ஊர் நாகை மாவட்டம் -மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூர். * இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவர். * இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். * செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஆகியோர் காலத்தவர். *" கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்", "விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்","கல்வியில் பெரியவர் கம்பர்" எனும் தொடர்களால் கம்பரின் பெருமைகளை அறியலாம். *"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் கம்பரை புகழ்ந்து பாடியுள்ளார். *திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் தமிழுக்கு கதி என்று என்பர் பெரியோர். * கம்பர் எழுதிய பிற நூல்கள்:1. ஏர் எழுபது,2. திருக்கை வழக்கம், 3. சடகோபர் அந்தாதி, 4. சரசுவதி அந்தாதி. *கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம். *இராமகாதை "ஆதிகாவியம்" அதை என்றும் வடமொழியில் இயற்றிய வால்மீகி ஆதிகவி என்றும் பெயருண்டு. *வடமொழியில் ...