கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள்
கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள்
*கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர்.
* பிறந்த ஊர் நாகை மாவட்டம் -மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூர்.
* இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவர்.
* இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்.
* செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஆகியோர் காலத்தவர்.
*" கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்", "விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்","கல்வியில் பெரியவர் கம்பர்" எனும் தொடர்களால் கம்பரின் பெருமைகளை அறியலாம்.
*"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் கம்பரை புகழ்ந்து பாடியுள்ளார்.
*திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் தமிழுக்கு கதி என்று என்பர் பெரியோர்.
* கம்பர் எழுதிய பிற நூல்கள்:1. ஏர் எழுபது,2. திருக்கை வழக்கம், 3. சடகோபர் அந்தாதி, 4. சரசுவதி அந்தாதி.
*கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம்.
*இராமகாதை "ஆதிகாவியம்" அதை என்றும் வடமொழியில் இயற்றிய வால்மீகி ஆதிகவி என்றும் பெயருண்டு.
*வடமொழியில் வால்மீகி எழுதிய காப்பியத்தைத் தழுவி வந்ததால் இது ஒரு வழி நூல்.
*இந்நூலை கம்ப நாடகம் எனவும் கம்ப சித்திரம் எனவும் வழங்குவர்.
*இந்நூலின் பெரும்பிரிவு -காண்டம்; உட்பிரிவு -படலம்.
*கம்பராமாயணம் 6 காண்டங்கள் உடையது. அவை பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்.
*படலங்கள்-113; பாடல்கள்-10,569.
*ஏழாம் காண்டமாக உத்திரகாண்டம் என்னும் பகுதியை கம்பரின் சமகாலத்தவர் ஆகிய ஒட்டக்கூத்தர் இயற்றினார்.
*கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு தொண்ணூற்றாறு.
,*சுந்தரன் என்னும் பெயரால் ராமாயணத்தில் வழங்குபவர் அனுமன்.
*சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் அனுமன்.
*ராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் காட்டியது கணையாழி.
*சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி பிடித்த காலம் ஒரு மாதம்.
*ராமன் வனவாசம் சென்றது 14 ஆண்டுகள்.
*தமிழின் மிகப்பெரிய நூல் கம்பராமாயணம்.
*ராமனின் தம்பிகள் பரதன் ,இலக்குவன் , சத்ருகன்.
*கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி.
*வாலியைக் கொன்றவன் ராமன்
*கம்பர் மகன் அம்பிகாபதி. அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதி கோவை.
*கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்).
சில கம்பராமாயண மேற்கோள் வரிகள்:
"அண்ணனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்; இன்று போய் நாளை வா; வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்."
Comments
Post a Comment