மகாகவி பாரதியாரின் சில கவிதை மணிகள்
மகாகவி பாரதியாரின் சில கவிதை மணிகள் பாரதியார்: * "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு". * "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" . *"தமிழ்ச்சாதி எனப்பல பேசி இறைஞ்சிடப் பாடுவதாய், நாட்பட நாட்பட நாற்றமும் சேறும், பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? விதியே விதியே, தமிழச் சாதியை. "கற்பகத் தருவோ, காட்டிடை மரமோ விதியே தமிழச் சாதியை, எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக் உணர்த்துவாய்" "தெய்வம் பலபல சொல்லிப், பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்றாய்; எங்கும் ஒர் பொருளானது தெய்வம்" "நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் விடும் அறிவுடன் படைத்து விட்டாய், வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ." "விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான், வெட்ட வெளியின் விரிவெல்லாம் நான்; மண்ணில் கிடக்கும் புழுவெல்...