மகாகவி பாரதியாரின் சில கவிதை மணிகள்
மகாகவி பாரதியாரின் சில கவிதை மணிகள்
பாரதியார்:
* "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு".
* "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" .
*"தமிழ்ச்சாதி எனப்பல பேசி இறைஞ்சிடப் பாடுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும், பாசியும் புதைந்து
பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும்
நோக்கமோ? விதியே விதியே, தமிழச் சாதியை.
"கற்பகத் தருவோ, காட்டிடை மரமோ விதியே தமிழச் சாதியை, எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக் உணர்த்துவாய்"
"தெய்வம் பலபல சொல்லிப், பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்றாய்; எங்கும் ஒர் பொருளானது தெய்வம்"
"நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர் விடும் அறிவுடன் படைத்து விட்டாய், வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ."
"விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான், வெட்ட வெளியின் விரிவெல்லாம் நான்; மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்;வாரியினுன் உயிரெல்லாம் நான்,"
"ஊதுமினோ வெற்றி, ஒலிமினோ வாழ்த்தொலிகள்,
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ ஓங்குமினோ,
தீது சிறிதும் பயிலாச் செம்மணி மா நெறி கண்டோம். வேதனைகள் இனி வேண்டா, விடுதலையோ திண்ணமே;
"மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விட கொடுமையானது.'
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை- அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்,
வெந்து தணிந்தது காடு-தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்."
"பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
"மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்.
நி ஹட்னைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும், இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்!
"பொய்மை காதலில் மயங்கி, உன் பெண்மையை இழந்து விடாதே...
ஆணுக்கு அது ஒரு நாள் சுகம், உனக்கோ அது வாழ்நாள் வலி...
பாதம் தொட்டு மெட்டி போடும் வரை, நெற்றி பொட்டு முத்தம் மட்டும் போதும்..
உண்மை காதல் உடலை தேடாது, உறவாக்கிக் கொள்ள மட்டுமே விரும்பும்..."
"தேடிச்சோறு நிதம் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையான பின்-மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ"
"இனியொரு விதிசெய் வோம் அதை எந்த நாளும் காப்போம். தனியொருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
"சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மாசாத்திரம் ஏதுக்கடீஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மாசாத்திரமுண்டோடீமூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று"
"சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மாவானக்கருமை கொலோ பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்டு நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ"
'ஓடி விளையாடு பாப்பா!-நீஓய்ந்திருக்கலாகாது பாப்பா!ஓடி விளையாடு பாப்பா!-ஒருகுழந்தையை வையாதே பாப்பா!
சின்னஞ்சிறு குருவி போலே-நீதிரிந்து பறந்துவா பாப்பா!வண்ணப் பறவைகளைக் கண்டு-நீமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!
கொத்தித் திரியும் அந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
கத்தித் திரியும் அந்த காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!
பாலைப் பொழிந்து தரும் பாப்பா!-அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்து வரும் நாய்தான்- அது
மனிதருக்கு தோழனடி பாப்பா!
வண்டி இழுக்கும் நல்ல குதிரை-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!
பொய் சொல்லக்கூடாது பாப்பா-என்றும்
புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா-ஒரு
தீங்கு வரமட்டாது பாப்பா!
பாதகஞ் செய்பவரைக் கண்டால்- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கிவந்த போதும்- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா -தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி அழும் குழந்தை நொண்டி- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா,-நீ
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தினும் இனிய தடி பாப்பா
நம்ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
வேதம் உடையதிந்த நாடு-நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
தேசம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி -அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.
உயிர்களிடத்தில் அன்பு வேணும்;- தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; இது
வாழும் முறைமையடி பாப்பா!
https://www.youtube.com/channel/UCsATHGWVJAHCWsnlvNxEj4w..hi friends the is my YouTube channel link if you want some food related video.pls watch here
Please friends support my page
ReplyDelete