Posts

Showing posts from October, 2019

தமிழின் வினா-விடை வகைகள்/வினா-விடை வகைகள்.

                              வினா -விடை வகைகள் வினா ஆறு வகைப்படும்: 1. அறிவினா 2. அறியா வினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா என்பன. அறிவினா:                        அறிவினா என்பது, தான் ஒரு பொருளைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அப்பொருள் பற்றி பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா ஆகும். எ.கா: திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவரிடம் வினவுவது. அறியா வினா:                     அறியா வினா என்பது தான் அறியாத ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்வதற்காக பிறரிடம் வினவுவது. எ.கா: எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. ஐய வினா:                  தனக்கு ஐயமாக (அச்சமாக) இருக்கின்ற ஒரு பொருள் குறித்து ஐயத்தைப்(அச்சத்தைப்) போக்கிக் கொள்வதற்காக வின...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்/தமிழின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

        பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால் கடுங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.   நாலடியார்: *நாலடியார் -நான்கு +அடி +ஆர். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல். *நாலடியாரில் 400 பாடல்கள் உள்ளன. *நாலடியாரை நாலடி நானூறு எனவும் வழங்குவர். *நாலடியாரில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன அவை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகும். *நாலடியாரை சிறப்பிக்கும் வகையில் பழமொழி "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" "நாலும் இரண்டும்  சொல்லுக்கு உறுதி." *சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. *சிறப்பு பெயர்கள்:-வேளாண் வேதம் ,நாலடி‌ நானூறு. *தொகுத்தவர் பதுமனார். *முப்பாலாக பகுத்தவர் தருமர். *அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.   அறத்துப்பால்-13 அதிகாரம்   பொருட்பால்-24 அதிகாரம்   காமத்துப்பால்-3 அதிகாரம். *40 அதிகாரங்களும், 12 இயல்களும் உள்ளன. *பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார். *இந்...

முச்சங்கம் (மூன்று சங்கம்) தமிழ் மொழியின் மூன்று சங்கங்கள்

                                  முச்சங்கம் (மூன்று சங்கம்) முச்சங்கம்:                     *  சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆவார்.                     * சங்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிறது.                     * முச்சங்கம் பற்றிய விரிவான செய்தியை முதலில் சொன்னவர் இறையனார் . களவியல் என்ற நூலின் உரையாசிரியர் நக்கீரர்.                    * மூவேந்தர்களும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் :                         *முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை .   ...