தமிழின் வினா-விடை வகைகள்/வினா-விடை வகைகள்.
வினா -விடை வகைகள்
வினா ஆறு வகைப்படும்:
1. அறிவினா
2. அறியா வினா
3. ஐய வினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா என்பன.
அறிவினா:
அறிவினா என்பது, தான் ஒரு பொருளைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அப்பொருள் பற்றி பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா ஆகும்.
எ.கா: திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவரிடம் வினவுவது.
அறியா வினா:
அறியா வினா என்பது தான் அறியாத ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்வதற்காக பிறரிடம் வினவுவது.
எ.கா: எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது.
ஐய வினா:
தனக்கு ஐயமாக (அச்சமாக) இருக்கின்ற ஒரு பொருள் குறித்து ஐயத்தைப்(அச்சத்தைப்) போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா ஐய வினா என்பதாகும்.
எ.கா: அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?.
கொளல் வினா:
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைக்காரரிடம் வினவும் வினா கொளல் வினா.
எ.கா: காய்கறி உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.
கொடை வினா:
தான் ஒரு பொருளை பிறருக்கு கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலைப் பற்றி பிறரிடம் வினவுவது கொடை வினா ஆகும்.
எ.கா: குழந்தைகளே உங்களுக்கு உணவு வேண்டுமா?
ஏவல் வினா:
ஒரு தொழிலை செய்யும்படி ஏவும் வினா
விடை வகைகள் பதிவேற்றம் செய்யப்பட்ட வில்லை
ReplyDelete