Posts

மகாகவி பாரதியாரின் சில கவிதை மணிகள்

 மகாகவி பாரதியாரின் சில கவிதை மணிகள் பாரதியார்: * "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்       கொண்ட  தமிழ்நாடு". * "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" . *"தமிழ்ச்சாதி எனப்பல பேசி இறைஞ்சிடப் பாடுவதாய்,    நாட்பட நாட்பட நாற்றமும் சேறும், பாசியும் புதைந்து    பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும்    நோக்கமோ? விதியே விதியே, தமிழச் சாதியை. "கற்பகத் தருவோ, காட்டிடை மரமோ விதியே தமிழச் சாதியை, எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக் உணர்த்துவாய்" "தெய்வம் பலபல சொல்லிப், பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்றாய்; எங்கும் ஒர் பொருளானது தெய்வம்" "நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ, சொல்லடி சிவசக்தி  எனைச் சுடர் விடும் அறிவுடன் படைத்து விட்டாய், வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ." "விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான், வெட்ட வெளியின் விரிவெல்லாம் நான்; மண்ணில் கிடக்கும் புழுவெல்...

கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள்

                    கம்பராமாயணம் பற்றி சில குறிப்புகள் *கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர். *காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு. * பிறந்த ஊர் நாகை மாவட்டம் -மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூர். * இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவர். * இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். * செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஆகியோர் காலத்தவர். *" கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்", "விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்","கல்வியில் பெரியவர் கம்பர்" எனும் தொடர்களால் கம்பரின் பெருமைகளை அறியலாம். *"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார் கம்பரை புகழ்ந்து பாடியுள்ளார். *திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் தமிழுக்கு கதி என்று என்பர் பெரியோர். * கம்பர் எழுதிய பிற நூல்கள்:1. ஏர் எழுபது,2. திருக்கை வழக்கம், 3. சடகோபர் அந்தாதி, 4. சரசுவதி அந்தாதி. *கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம். *இராமகாதை "ஆதிகாவியம்" அதை என்றும் வடமொழியில் இயற்றிய வால்மீகி ஆதிகவி என்றும் பெயருண்டு. *வடமொழியில் ...

அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் அழகானபொன்மொழிகள்

Image
அறிஞர் அண்ணா, பெரியார், மற்றும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன் மொழிகள். அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகள்: "எதிரிகள் தாக்கித் தாக்கித், தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்." "மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்து நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்". "போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் கலந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல பக்கத் துணையாக இருப்பது நம் கல்வி மட்டுமே". "மறப்போம் மன்னிப்போம்". "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு." "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்". "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு". "பிறருக்குத் தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாக விடுகின்றோம்". "நெஞ்சிலேயே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி". "ஒரு ஜனநாயக  சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்குத் தடையோ சுதந்திர உணர்வுகளு...

தமிழின் வினா-விடை வகைகள்/வினா-விடை வகைகள்.

                              வினா -விடை வகைகள் வினா ஆறு வகைப்படும்: 1. அறிவினா 2. அறியா வினா 3. ஐய வினா 4. கொளல் வினா 5. கொடை வினா 6. ஏவல் வினா என்பன. அறிவினா:                        அறிவினா என்பது, தான் ஒரு பொருளைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அப்பொருள் பற்றி பிறருக்கு தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா ஆகும். எ.கா: திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவரிடம் வினவுவது. அறியா வினா:                     அறியா வினா என்பது தான் அறியாத ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்வதற்காக பிறரிடம் வினவுவது. எ.கா: எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. ஐய வினா:                  தனக்கு ஐயமாக (அச்சமாக) இருக்கின்ற ஒரு பொருள் குறித்து ஐயத்தைப்(அச்சத்தைப்) போக்கிக் கொள்வதற்காக வின...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்/தமிழின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

        பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்பால் கடுங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.   நாலடியார்: *நாலடியார் -நான்கு +அடி +ஆர். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல். *நாலடியாரில் 400 பாடல்கள் உள்ளன. *நாலடியாரை நாலடி நானூறு எனவும் வழங்குவர். *நாலடியாரில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன அவை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகும். *நாலடியாரை சிறப்பிக்கும் வகையில் பழமொழி "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" "நாலும் இரண்டும்  சொல்லுக்கு உறுதி." *சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. *சிறப்பு பெயர்கள்:-வேளாண் வேதம் ,நாலடி‌ நானூறு. *தொகுத்தவர் பதுமனார். *முப்பாலாக பகுத்தவர் தருமர். *அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.   அறத்துப்பால்-13 அதிகாரம்   பொருட்பால்-24 அதிகாரம்   காமத்துப்பால்-3 அதிகாரம். *40 அதிகாரங்களும், 12 இயல்களும் உள்ளன. *பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார். *இந்...

முச்சங்கம் (மூன்று சங்கம்) தமிழ் மொழியின் மூன்று சங்கங்கள்

                                  முச்சங்கம் (மூன்று சங்கம்) முச்சங்கம்:                     *  சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆவார்.                     * சங்கம் பற்றிய குறிப்பு முதன்முதலில் திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிறது.                     * முச்சங்கம் பற்றிய விரிவான செய்தியை முதலில் சொன்னவர் இறையனார் . களவியல் என்ற நூலின் உரையாசிரியர் நக்கீரர்.                    * மூவேந்தர்களும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் :                         *முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை .   ...

பதினெண் மேற்கணக்கு நூல்கள்./தமிழின் பதினெண்மேல்கணக்கு நூல்கள்

                     பதினெண்மேற்கணக்கு நூல்கள்                         பதினெண் மேற்கணக்கு நூல்கள்:                *எட்டுத்தொகை                *பத்துப்பாட்டு எட்டுத்தொகை:            " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு             ஒத்த பதிற்றுப்  பத்து ஓங்கு பரிபாடல்             கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம்             என்று இத்திறத்த எட்டுத் தொகை." *அக நூல்கள் ஐந்து:             நற்றிண, ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு. *புற நூல்கள் இரண்டு:            பதிற்றுப்பத்து, புறநானூறு. *எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்து நூல்:             பரிபாட...